கலங்கவேண்டாம் கர்த்தரின் ஜனமே
கர்த்தர் இயேசு வந்திடுவார்
அவர் இருக்கும் இடந்ததனிலே
நம்மையும் சேர்த்துக்கொள்வர்
1. பூமிக்குரிய கூடாரம்
நம்வீடு அழிந்துபோனாலும்
கை வேலையில்லாத வீடு ஒன்று
பரலோகத்தில் நமக்கு உண்டு
2. பூமிக்குரிய கூடாரத்தில்
பாரம் சுமந்து தவிக்கின்றோம்
தேவனுடைய ஜனத்திற்கு
இளைப்பாறும் காலம் இனிவருதே
3. தேவனுடைய ஜனத்திற்கு
தேவன் அளிக்கும் ராஜ்ஜியத்தை
தேவ தூதர்கள் உற்றுப் பார்க்க
ஆசையாய் ஆவலாய் அழைக்கின்றார்
4. நிலையான நகரம் இங்கு இல்லை
வரப்போகிறதை நாடிடுவோம்
உதட்டின் கனியாம் ஸ்தோத்திரத்தை
உன்னதத்திற்கே செலுத்திடுவோம்
5. இந்த காலம் கடைசிகாலம்
கடைசி காலத்தில் கொடிய காலம்
கர்த்தர் நம்மை காத்திடுவார்
அவரும் நம்மை சேர்த்திடுவார்
HOME
More Songs